மகிந்த அரசாங்கத்தால் இப்போது இலக்கு வைக்கப்பட்டுள்ள நபர் இவராகக் கூட இருக்கலாம்?

இலங்கை அரசியல் வரலாற்றில் நாட்டிற்காக தம்மை அர்ப்பணித்த வீரர்களிற்கு  சரியான இடங்களை அதாவது அரசியல் ரீதியாக  அவர்களுக்குரிய மரியாதையினை அரசியல் வாதிகள் கொடுப்பதில்லை எனவும் மாறாக அரசியல் தேவைகளுக்காக மாறி மாறி வரும் கட்சிகள் பாதுகாப்பு அதிகாரிகளை பயன்படுத்திவிட்டு நட்டாற்றில் விடுவது தான் வழமை என பத்திரிகைகள் புழுங்கத் தொடங்கியுள்ளன.

SRILANKA-MILITARY/அண்மைகாலமாக சரத் பொன்சேகாவை அரசாங்கம் ஓரம் கட்டிய விதம் அரசாங்கத்தினால் திட்டமிட்டு தணிக்கை செய்யப்பட்டாலும் பல்வேறு ஊடகவியலாளர் மற்றும் ஆதரவாளர்களினால் கசிந்த வண்ணமே உள்ளன.

இதன் படி தற்போது சரத் பொன்சேகாவினை ஆளும் மகிந்த கட்சி தூக்கி எறிய எதிரணியினர் அவரை கையேந்துவதாக உள்ளது ஆனால் இரு கட்சியுமே சரத் பொன்சேகாவினைதமது சொந்த நலன்களுக்கு தான் பாவிக்கப்பட்டார், பாவிக்கப்படபோகின்றார் என்பதே ஊடகவியலாளர் கருத்து. இதன்படி ஜானக பெரேரா போன்று சரத் பொன்சேகாவின் கதையும் முடியலாம் என்பதும் சிங்கள தேசப்பற்றாளர்களின் ஆதங்கம்.

மகிந்த அவர்கள் அண்மையில் தமது ஆதரவாளர்களிடம் பேசும் போது சரத் பொன்சேகா மற்றும் இராணுவ அதிகாரிகள் பற்றி கீழ்த்தரமாக பேசியுள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது இராணுவத்திடம் கடந்த 30 வருடமாக துப்பாக்கியும் வெடிகுண்டும் ரவைகளும் இருந்தது. ஆனால் அவர்களால் ஏன் யுத்தத்தில் வெல்லமுடியாது போனது என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆகவே புலிகளை தோற்கடித்தது தனது தலைமைத்துவமே அன்றி இராணுவம் அல்ல என கூறியுள்ளார். மேலும் வரலாற்று ரீதியாக  10 இற்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் இருந்திருக்கின்றார்கள் ஆனால் வரலாறு துட்ட கைமுனு என்ற அரசனையே போற்றி வருகின்றது எனவும் கூறியுள்ளார்.

இது இவ்வாறு இருக்க சரத் பொன்சேகாவினை புறம் தள்ளும் முயற்சி இன்னமும் முடியவில்லை என கூறப்படுகின்றது. இப்போதும் கூட அவரை இராணுவ சேவையில் இருந்து விலகி சிவில் சேவைகளில் ஈடுபடுமாறு மகிந்தவின் மனைவி மூலம் சரத் பொன்சேகாவின் மனைவிக்கு தகவல்கள் அனுப்பபடுவதாக கூறப்படுகின்றது.

இது தவிர சரத் பொன்சேகாவின் அனைத்து பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் கோத்தபாயவின் ஆதரவாளர்கள் என்றும் மேலும் சரத் பொன்சேகாவின் தொலைபேசிகள் அனைத்தும் இரகசிய படை பிரிவு ஒன்றினால் பதிவு செய்யப்படுவதாகவும் ஊடகவியலாளர் ஒருவர் கூறியுள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக ரத் பொன்சேகாவை ஒன்றுமே செய்ய முடியாத கட்டம் என்று  ஒன்று வருமாயின் சில போர் மீறல் சம்பவங்களை சரத் பொன்சேகா மீது பளிபோட்டு மகிந்தவினால் அமைக்கப்படும் போர் விசாரணை குழு மூலம் சரத் பொன்சேகாவுக்கு தண்டனை வழங்கவும்  மகிந்தவும் கோத்தாவும் பின் நிக்க மாட்டார்கள் என ஊடக வியலாளர் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதற்கு ஏற்ப பல விசேட சிவில் மற்றும் இராணுவ குழுக்கள் இப்போதே தயாராகி வருவதாக  ராவய தெரிவித்துள்ளது.

இது இவ்வாறு இருக்க சரத் பொன்சேகாவும் தன்னை பாதுகாத்து கொள்ளவதற்கான ஏற்பாட்டில் குதித்துள்ளார். அதாவது சரத் பொன்சேகா அரசியலில் குதிப்பது அல்லது மகிந்த குடும்பத்தினை மாட்டுவது இதுவே தனக்கான பாதுகாப்பு என முடிவெடுத்துள்ளாராம் இந்தவகையில் சரத் பொன்சேகாவை வைத்து ஆடப்படும் நாடகத்தில்  ஆளும் கட்சியா அல்லது எதிர்கட்சியா நன்மை அடையப்போகின்றது என்பதே கேள்வி மாறாக சரத் பொன்சேகா அல்ல என்பதே ஊடகங்கள் கருத்து.

எது எப்படியோ சிங்கள பேரினவாத கட்சிகளின் நாடகங்கள் சுமுகமாக நடந்து தமிழர்களுக்கு தீங்கு விளைவித்த அரசியல், படை அதிகாரிகள் அனைவரும் தமக்குள்ளேயே அழியவேண்டும் என்பதே தமிழர்கள் அவா.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.