இறுதி யுத்தத்தில் எமது இராணுவத்தினர் கொத்துக்குண்டை பாவிக்கவில்லை – இராணுவத் தளபதி

இலங்கை அரசாங்கம் ஒருபோதும் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கை இவ்வாறான குண்டுகளைப் பயன்படுத்தியதாக சில தரப்பினர் குற்றம் சுமத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

jagath-jayasuriya-150x150அரசாங்கத்தையும், இராணுவத்தையும் அவமானப்படுத்தும் நோக்கில் சில சக்திகள் இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் படையினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச சட்ட திட்டங்களுக்குப் புறம்பான யுத்த உபகரணங்களைப் பயன்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிலக்கண்ணி வெடி அகழ்வு தொடர்பான சர்வதேச மாநாடொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நிலக்கண்ணி வெடி பயன்பாடும் மிகவும் வரையறுக்கப்பட்ட வகையிலேயே படையினர் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே இலங்கைப் படையினர் நிலக்கண்ணி வெடிகளை பயன்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.