அநுரகுமார திஸாநாயக்க, மங்கள சமரவீர இருவரையும் கோதாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமய கொலை செய்யத் திட்டம்?

ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர ஆகியோருக்கு எதிராக இந்த வாரத்திற்குள் ஏதேனும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மேஜர் சிறிவர்தன என்ற அதிகாரிக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருப்பதாகவும் இந்தப் பணியை வெற்றிகரமாக முடித்தால், அவருக்கு வெளிநாட்டுத் தூதரகமொன்றில் பதவியொன்றை வழங்குவதாக உறுதியளித்திருப்பதாக இராணுவத் தரப்புத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள இணையம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

question-mark3aஅநுரகுமார திஸாநாயக்க, மங்கள சமரவீர ஆகியோர் ஜெனரல் சரத் பொன்சேகாவை அரசியலுக்குள் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுப்பதற்காக பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறான மரண உத்தரவொன்றைப் பிறப்பித்திருப்பதாகவும் அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள மேஜர் சிறிவர்தன கடந்த காலங்களில் கொழும்பு உள்ளிட்ட அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற சில கொலைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் எனவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
 
மேஜர் சிறிவர்தன என்பவர் கோதாபய ராஜபக்ஷவின் கீழ் இயங்கிவரும் துணை இராணுவத்தின் பிரதானி எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறிவர்தன மாலேபiயில் இருக்கும் தனது ஏழு ஏக்கர் காணி மற்றும் ஆடம்பர வீட்டை 2 ஆயிரம் லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்துவிட்டு ஐரோப்பாவிலுள்ள இலங்கைத் தூதரக அலுவலகமொன்றில் பாதுகாப்பு ஆலோசகராக செல்லத் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இவை குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.