நோர்வே பாராளுமன்றின் முன் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்

23.10.2009 வெள்ளிக்கிழமை நோர்வே நாடளமன்றம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.சிறிலங்கா அரசபயங்கரவாத்தின் முட்கம்பிவேலிகளுக்குள் அடைக்கப்பட்டு வாழ்வுரிமைக்காக ஏங்கும் எம்மினத்தின் விடுதலையை வலியுறுத்தி இந்த கவனயீர்ப்புப்போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

மே 17 ஆம் திகதிக்கு முன்பு விடுதலைப்புலிகள் தமது சொந்த மக்களையே அடைத்து வைத்திருக்கின்றார்கள் மனிதநேயத்தை அப்பட்டமாக மீறுகின்றார்கள் என அனைத்து நாடுகளும் சிறிலங்காவின் இனப்படுகொலைக்கு நற்சான்றிதல் வழங்கி கௌரவித்தனர். இந்த நிலையில் மே 17 ஆம் திகதிக்கு பின் வதைமுகாம்களில் அடைக்கப்பட்ட மக்கள் 5 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.குறிப்பிட்ட தொகையினர் மட்டுமே கண்துடைப்புக்காக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளையில் முகாங்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள மக்கள் அரச பயங்கர வாதத்தால் கடத்தப்பட்டு காணாமல் போகின்றனர்.இந்நிலையில் உலகத்தின் மனக்கண்கள் மூடப்பட்டு கிடக்கிறது.உலகத்தின் இந்த நிலையை மாற்றியமைக்க புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களே உரிமைக்காக குரல் கொடுக்கும் சக்தியாக மாறவேண்டும் என்ற பலரின் கருத்துக்கமைய நோர்வே பாராளமன்றம் முன்பாக இம்மாதம் இரண்டாவது நாளாக கவனயீர்ப்புப்போராட்டம் நடைபெற்றுள்ளது.

அடுத்த கவனயீர்ப்புப்போராட்டம் நோர்வே நாடளமன்றம் முன்பாக எதிர்வரும் 30.10.2009 வெள்ளிக்கிழமை மாலை 18:00 இல் இருந்து 19:00 வரை நடைபெறும் எனவும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்த நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தினர் அறிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.