குற்றவாளி கூண்டில் ராஜபக்சே நிறுத்தப்படுவார்: வைகோ

இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுவார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார பயணத்தை இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராமேஸ்வரத்தில் துவக்கி வைத்தார்.

vaiko101அப்போது பேசிய அவர், இலங்கையில் பல லட்சம் பேரை கொன்று குவித்தது சிங்கள அரசு. தமிழக மீனவர்கள் மீது 1983ம் ஆண்டு முதல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசை, மாநில அரசு எந்த கேள்வியும் கேட்கவில்லை. இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை.

இலங்கை கடற்படையில் சீனர்கள் உள்ளனர். அவர்கள் உதவியுடன் நமது எல்லைக்குள்ளே சிங்கள படை புகுந்து தமிழக மீனவர் களை தினந்தோறும் சித்ரவதை செய்து வருகின்றனர். சீனர்கள் உதவியுடன் இந்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்க இலங்கை திட்டமிட்டுள் ளது. இதற்கு நமது அரசு மவுனமாக உள்ளது. பின்காலத்தில் மிகப்பெரிய எல்லை பிரச்னையை இந்தியா சந்திக்கப்போகிறது.

நமது மீனவர்களையும், ஈழத்தமிழர்களையும் காக்க விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாவார்கள். இலங்கை தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையை பெற்றுதரும் பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது. போரை நிறுத்த வேண்டும் என தமிழக சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியது. இதனை மத்திய அரசுக்கு எச்சரிக்கையாக கூட தெரிவிக்கவில்லை. ஈழம் மீண்டும் மலரும். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுவார் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.