இலங்கையின் போர்க்குற்ற விசாரணயை நாங்கள் எப்படி நம்புவது – ஐநா

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைகளின் நம்பகத்தன்மை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்றதாக பரவலாக சுமத்தப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


reuters_philipஎனினும், இந்த விசாரணை ஆணைக்குழுவின் பக்கச் சார்பற்ற தன்மை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
 
சொந்தப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடத்தப்படும் சுய விசாரணைகளை எந்தளவிற்கு ஏற்றுக்கொள்ள முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அண்மையில் படைவீரர்களினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சித்திரவதைகள் அடங்கிய வீடியோக் காட்சிகள் தொடர்பிலும் அரசாங்கம் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் அவை போலியானவை என அரசாங்கம் அறிவித்திருந்தது.
 
இந்த வீடியோக் காட்சி தொடர்பில் விசாரணை நடத்திய நிபுணர்கள் குழுவில் இரண்டு இராணுவ அதிகாரிகள் அங்கம் வகித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
 
சுயாதீனமான முறையில் நடத்தப்படும் விசாரணைகளையே ஏற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.