இலங்கை அரசாங்கத்தின் கூத்துக்களுக்கு அமெரிக்காவும் ஐ. நா வும் ஆடக்கூடாது – HRW

இலங்கை அரசாங்கத்தின் போர்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் விசாரணை செய்ய சர்வதேச விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும். மூடியிருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். இலங்கை அரச அதிபர் தாம் அமைக்க போவதாக கூறும் விசாரணைகுழு ஓர் கண்துடைப்பு நடவடிக்கை ஆகும்.

hrw-700315இந்த நாடகத்திற்கு அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் சேர்ந்து ஆடக்கூடாது. சுயாதீனமான சர்வதேச விசாரணை குழு கட்டாயம் அமைக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குனர் பிராட் அடம்ஸ் அவர்கள்.

அண்மையில்  இலங்கை அரசாங்கம் அமெரிக்காவின் போர் குற்றம் தொடர்பான அறிக்கைக்கு பதில் அளிக்கும் போது தாம் சொந்தமாக விசாரணை குழுவினை உள் நாட்டில் அமைத்து விசாரணை செய்ய போவதாக கூறியுள்ளமையும் அதனை அமெரிக்கா பாராட்டியமையும் குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலளிக்கும் முகமாகவே பிராட் அடம்ஸ் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.