நோயுற்ற ஒரு தமிழனைக் கூட தமது அரசியல் பரப்புரைக்காக பயன்படுத்தும் மகிந்த அரசு

ஏ9 வீதி உள்ளிட்ட பல்வேறு திறப்புகள் மற்றும் ஏனைய பிரச்சாரங்களில் அரசும் அதனோடு இணைந்த கட்சிகளும் முழுமூச்சில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் நோயாளர்களையும் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

srilanka-governmentயாழ் குடாநாட்டிலிருந்து ஏ9 வீதியூடாக அம்புலன்ஸ் ஊடாக நோயாளிகளை தெற்கிற்கு எடுத்துச் செல்லும் நிகழ்வொன்று ஆரம்பமாகியுள்ளது.
 
சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் எனப்படுகின்ற அமைப்பினூடாக நோயாளி ஒருவர் ஏ9 வீதியூடாக அம்புலன்ஸ் மூலம் தெற்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டார். இந்த ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டிருந்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர் மகாநாடும் விசேட மகாநாடும் இடம்பெற்றிருந்தது.
 
அதேவேளை தெற்கிற்கு கொண்டு செல்லப்படும் நோயாளரான பற்குணம் என்பவர் குறித்த நிகழ்விற்காக மேடையில் நீண்ட நேரம்; படுக்க வைக்கப்பட்டிருந்தார். நோயுற்றவரை தெற்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது கூட அரசியலாகி விட்டதாக அவதானிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.