இந்தோனேஷியாவில் தங்கியுள்ள தமிழர்களுக்கு தஞ்சம் வழங்க முடியாது – அவுஸ்திரேலியா

இந்தோனேஷியாவில் தற்போது தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு தஞ்சம் வழங்க முடியாது என அவுஸ்திரேலிய அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
 
அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய வேண்டும் என்பதே குறித்த இலங்கையர்களின் நோக்கமாகக் காணப்பட்ட போதிலும் அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட முடியாது எனக் குறிப்பிடப்படுகிறது.

australianfஇந்தோனேஷிய கடற்பரப்பில் குறித்த இலங்கை அகதிகள் பத்து தினங்களை கழித்துள்ளதாகவும், இவர்கள் அவுஸ்திரேலிய கப்பல் ஒன்றிலேயே தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
குறித்த அவுஸ்திரேலிய கப்பலை இந்தோனேஷிய எல்லைக்குள் பிரவேசிக்க உள்நாட்டு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
 
சர்வதேச கடற் பரப்பில் கைது செய்யப்படும் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களை இந்தோனேஷியாவிற்கு அனுப்பி வைப்பதாக ஏற்கனவே அவுஸ்திரேலியாவிற்கும் இந்தோனேஷியாவிற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
எந்த நாட்டில் அரசியல் தஞ்சம் கோர வேண்டும் என்பதனை இலங்கை அகதிகளினால் தீர்மானிக்க முடியாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.