உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டுக்கான இலச்சினை வெளியீடு

சர்வதேச தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற உள்ள உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டுக்கான இலச்சினையை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி புதன்கிழமை வெளியிட்டார்.

worldtamilsangamஇலங்கையில் முள்வேலி முகாம்களில் தமிழர்களில் அவதிப்படும் ஓவியத்துடன் தமிழராய் எழுவோம் என்ற வரியுடன் இந்த இலட்சினை உருவாக்கப்பட்டுள்ளது.
 
இலட்சினையை வெளியிட்டு நிகழ்வில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள கிருஷ்ணசாமி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு நல்லது செய்யும் என இனியும் எதிர்பார்க்க முடியாது.
 
உலகெங்கும் உள்ள 10 கோடி தமிழர்களும் ஒன்றுபடாததுதான் பிரசசி;னைக்கு காரணம். எனவே 2010 பிப்ரவரி 6, 7 திகதிகளில் கோவையில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெறும். இதற்காக சர்வதேச தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.