மகிந்தவை தோற்க்கடிக்க எங்களுடன் இணையுங்கள் – ஜே.வி.பிக்கு ஐக்கிய தேசியக் கட்சி வெளிப்படையான அழைப்பு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லா தொழிப்பதற்கு ஆதரவளிக்குமாறு ஜே.வி.பி கட்சியிடம் ஐக்கிய தேசியக் கட்சி பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது,
 
நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஜே.வி.பி கொண்டிருப்பதகாவும், இந்த விடயத்தில் தம்முடன் இணைந்து செயற்பட முடியும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

unp_logo_1தற்போதைய ஆட்சியாளர்களை தோற்கடிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள விரிவான கூட்டமைப்பு தொடர்பான அறிவித்தல் இன்னும் சில தினங்களில் ஊடகங்களில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
புதிய கூட்டமைப்பிற்காக புதிய சின்னம் ஒன்றை உருவாக்குவதா என்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
பதவியைப் பொறுப்பேற்று சில தினங்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றியமைக்கும் உத்தரவாதத்துடன் தாம் தேர்தல்களில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.