இடம்பெயர் முகாம் மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவில்லை

இடம்பெயர் முகாம்களிலிருந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
 
வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய ஐந்தாம் ஆண்டு மாணவர்களின் பெறுபேறுகளை வெளியிடுவதில் பரீட்சைத் திணைக்களம் காலத்தை தாழ்த்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

questionskvoor090500048ஒக்ரோபர் மாதம் 2ம் திகதி ஏனைய பகுதிகளில் தோற்றிய மாணவர்களது பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இன்னும் ஒரு வார காலத்திற்குள் பெறுபேறுகளை வெளியீடு செய்ய முடியும் என பரீட்சைத் திணைக்கள உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
 
முகாம்களில் தங்கியிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் விபரங்களைத் திரட்டுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் உரிய திகதியில் பெறுபேறுகளை வெளியிடுவதில் சிக்கல் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எது எப்படி இருப்பினும் இதன் உண்மைத் தன்மை எதுவென்று தெரியவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.