பிரித்தானியாவில் 9 ஆவது கிழமையாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கை அர‌சாங்க‌த்தினால் வ‌ன்னியில் இருந்து சிறைபிடிக்க‌ப்ப‌ட்டு வ‌வுனியா வ‌தைமுகாம்க‌ளில் அடைக்க‌ப்ப‌ட்டிருக்கும் அப்பாவி த‌மிழ் ம‌க்க‌ளை விடுவிக்க‌ கோரி இன்று 9 ஆவ‌து வெள்ளிக்கிழ‌மையாக‌ பிரித்தானிய‌ பிர‌த‌ம‌ர் காரியால‌ய‌த்தின் முன்ற‌லில் பிரித்தானியா த‌மிழ் ம‌க்க‌ளால் தொட‌ர் க‌வ‌ன‌யீர்ப்பு போராட்ட‌ம் முன்னெடுக்க‌ப்ப‌ட்ட‌து.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம் மற்றும் நீண்ட நாட்களாக நாடாளுமன்ற சதுக்கத்தில் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பரப்புரை மேற்கொள்ளும் மரியா ஆகியோர் கலந்துகொண்டு தமிழ் மக்களுக்கு ஆதரவளித்தனர்.

DSC00239

மாலை 2 ம‌ணி அள‌வில் நூற்றுக்க‌ண‌க்கான‌ த‌மிழ் ம‌க்க‌ளால் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ இந்த‌ க‌வ‌ன‌யீர்ப்பு போராட்ட‌ம் மாலை 7 ம‌ணிக்கு நிறைவுக்கு வ‌ந்த‌து.

க‌ட‌ந்த‌ வார‌ங்க‌ளில் த‌மிழ் ம‌க்க‌ளால் கையொப்ப‌ம் இட‌ப்ப‌ட்ட‌ ம‌னு மாலை 4 ம‌ணிய‌ள‌வில் பிரித்தானிய‌ த‌மிழ‌ர் பேர‌வையின‌ரால் பிர‌த‌ம‌ர் காரியால‌ய‌த்தில் கைய‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.