தேவர் இருந்திருந்தால் ஈழத்திற்குப் படை அனுப்பியிருந்திருப்பார் – வைகோ

முத்துராமலிங்கத் தேவர் உயிருடன் இருந்திருந்தால் இலங்கைத் தமிழர்களைக் காக்க படை ஒன்றை அனுப்பியிருந்திருப்பார் என்று கூறினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் குருபூஜை நேற்று சிறப்பாக நடந்தது. அதில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

vaiko-200_32மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், முத்துராமலிங்கத் தேவர் இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால், ஈழத்தில் தமிழர்கள் படும் அவதியைக் கண்டு கொதித்து, ஒரு தனிப்படையை அனுப்பி தமிழர்களைக் காத்திருப்பார் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.