இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை; அதை அவர்கள் வெல்வதும் இயற்கை

ஈழத் தமிழர் பிரச்சினையை அணையாத தீபமாக கொண்டு செலுத்தும் தமிழகத் தலைவர் நெடுமாறன். அரசியல் ரீதியாக வெவ்வேறு முடிவுகள் எடுக்கும் தலைவர்களையும் ஒன்றாக இனச்சரடு வைத்து இணைத்துச் செல்வது இவர்தான். இதனால் முதல்வர் குருணாநிதிக்கு முதல் எதிரியானார். அவர் ஆனந்த விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியின் திரு.பிரபாகரன் குறித்து கேட்ட கேள்விக்கான பதில் வருமாறு.

nedumaranகேள்வி: “பிரபாகரன் குறித்த மர்மம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. ஆனால் அவர் இருக்கிறார் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?”

பதில்:- “இந்தியாவும்,இலங்கையும் அந்த மர்மத்தை அறியத்தான் அலைந்து கொண்டிருக்கின்றது. பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். அடுத்தகட்ட போராட்டத்தைத் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் தயாராகி வருகிறார் என்பதை மட்டும்தான் இன்றைய நிலையில் என்னால் வெளியில் சொல்ல முடியும்.

மே 17ம் திகதி பிரபாகரன் இறந்ததாக அறிவித்தார்கள். 20ம் திகதி நாங்கள் சென்னையில் எழுச்சிப் பேரணி நடாத்தினோம். பல்லாயிரம் தமிழர்கள் உற்சாகத்துடன் வந்தார்கள். கடந்த 18ம் திகதி 50 ஆயிரம் தமிழர்கள் பேரணி நடாத்தியிருக்கிறார்கள். பிரபாகரன் இறந்து விட்டார் புலிகள் தோற்று விட்டார்கள் என்ற செய்தியை அவர்கள் துளியளவும் நம்பவில்லை. என்வேதான் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் தொடர்கின்றன!”

கேள்வி: “புலிகள் அமைப்பு இன்னமும் இருப்பதாகச் சொல்கிறீர்களா?”

பதில்:- “அதே வலிமையுடன் இருப்பதாகவே சொல்கிறேன். ஒன்றே கால் லட்சம் வீரர்களுடன் போன இந்திய அமைதிப்படையை இரண்டாயிரம் பேரை வைத்து எதிர் கொண்டார் பிரபாகரன். 650 புலிகள் வீரச்சாவை அடந்தார்கள். பலரும் சிதறடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்குத் தப்பினார்கள்.

ஆனால் மிச்சம் இருந்த சொற்பத் தொகையான புலிகளை மட்டும் வைத்து கெரில்லா தாக்குதல் மூலமாக அமைதிப்படையை திருப்பி அனுப்பினார் பிரபாகரன். ‘புலிகளால் இனி தலையெடுக்க முடியாது. பிரபாகரன் கதை முடிந்துவிட்டது’ என்று சென்னையில் வைத்து ராணுவத்தளபதி கல்கத் சொன்னார். அதன் பிறகுதான் தமிழீழத்தின் முக்கிய பகுதிகள் அத்தனையயும் பிடித்தார்கள். எனவே, இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை. அதை அவர்கள் வெல்வதும் இயற்கை.

என்று உறுதியுடன் பதிலளித்துள்ளார் திரு.நெடுமாறன்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.