பன்றிக் காய்ச்சல் பீதியை போன்றே சரத் என்ற பெயர் அரசாங்கத்திற்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது

பன்றிக் காய்ச்சல் நாட்டிற்கு பீதியை ஏற்படுத்தியிருப்பதைப் போன்றே சரத் என்ற பெயர் அரசாங்கத்திற்கு பீதியை ஏற்படுத்தியிருப்பதாகவும் இந்தப் பீதியை ஒழிப்பதற்காக அரசாங்கம் தற்போது ஊடக அடக்குமுறையில் ஈடுபட்டிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ranilஇராணுவ அதிகாரிகளை அரசியலில் சம்பந்தப்படுத்தி செய்திகளை வெளியிடுவது சட்டவிரோதமான செயற்பாடு என சுட்டிக்காட்ட அரசாங்கம் முயற்சித்த போதிலும், அவ்வாறான சட்டம் அரசியல் சாசனத்திலோ, குற்றவியல் சட்டத்திலோ, அவசரகால சட்டவிதிகளிலோ காணப்படவில்லையென ரணில் கூறியுள்ளார். தொழிற்சங்கப் பிரதிநிதிகளைத் தெளிவுபடுத்தும் வகையில் அண்மையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
பன்றிக் காய்ச்சலுக்கான எச்.1 என்1 என்ற வைரஸ் தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. அதற்கு இணையாக அரசாங்கத்திற்குள் சரத் என்ற பீதியும் பரவி வருகிறது. ஊடக அடக்குமுறையை மேற்கொண்டு இந்த பீதியைக் குணப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. சரத் சில்வா அல்லது சரத் பொன்சேக்கா ஆகிய பெயர்களைக் குறிப்பிடும் போது அரசாங்கம் பீதியால் நடுங்குகிறது. இவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.