திருப்பதியில் மகிந்த! தமிழத்தில் ஆர்ப்பாட்டம்!

சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று சனிக்கிழமை பிற்பகல் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்குச் சென்று  வெங்கசடாசபதியை தரிசனம் செய்துள்ளார்.

நேபாளம் காத்மாண்டுவில் இருந்து சிறப்பு வானூர்த்தி மூலம் ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா வானூர்த்தி நிலையத்தை வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து மகிழுந்து மூலம் திருப்பதி கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

IND11144Bஇவரது வருகையிட்டு  வானூர்த்தி நிலைத்திலிருந்து திருப்பதி கோயில் வரை காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரது பாதுகாப்பு தொடர்பில் சிறீலங்கா படை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியாளரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

மகிந்த ராஜபக்சவுக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்துள்ளதுடன் சிறப்பு வழிபாடுகளையும் ஒழுங்கமைத்துள்ளனர்.

இதேநேரம் மகிந்தவின் வருகையைக் கண்டித்து தமிழத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகத்திற்கு முன்பாக தமிழீழ விடுதலை உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.