தமிழர்களின் நெஞ்சில் நெருப்பை அள்ளிப்போடுகிறார்களே: வைகோ ஆவேசம்

இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதி கோவிலுக்கு வர திட்டமிட்டார்.  அதன்படி இலங்கை அதிகாரிகள், சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத்திரியிடம் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். பின்னர் ராஜபக்சே திருப்பதி வருவது உறுதியானது.

vaiko_nerudalஇன்று ராஜபக்சே  சிறப்பு விமானம் மூலம் கொழும்பில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு . பின்னர் அவர் கார் மூலம் திருப்பதி மலைக்கு சென்றார்.

மதியம் அவர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை அதிபர் ராஜபச்சேவுக்கு திருப்பதி கோயிலில் பூரண கும்ப மரியாதை அளிப்பது தமிழர்களை வேதனைப்படுத்துவதாக உள்ளது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிகையில்,

’’இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபச்சேவுக்கு இந்துக்களின் புனிதத் தலமான திருப்பதி கோயிலில் ராஜ மரியாதை அளிப்பது தமிழர்களின் நெஞ்சில் நெருப்பை அள்ளிப்போடுவதாக உள்ளது.

குழந்தைகள், முதியவர்கள் என்று லட்சக்கணக்கான தமிழ் மக்களை குண்டு வீசிக் கொன்றவர் ராஜபட்சே. அவருக்கு ஆயுத உதவி செய்த மத்திய அரசு தற்போது அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பது வெந்த புண்ணில் சூட்டுக்கோல் பாய்ச்சும் வகையில் இருக்கிறது.

தமிழர்களை கொன்ற அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. ராஜபட்சேவை இந்தியா வரவேற்பதும் கோயிலில் அவருக்கு மரியாதை செய்வதும் உலகை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் வஞ்சக நாடகம் ஆகும்.

தமிழர்களை இழிவுப்படுத்தும் மத்திய அரசின் இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.