மகிந்தவுக்கு எதிராக இணையத்தில் கருத்து வெளியிட்ட இளைஞர் கைது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக இணைய தளமொன்றில் கருத்து வெளியிட்ட இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கும் எதிராக கடுமையான கருத்துக்களை வெளியிட்ட இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

handcuffஎந்த இணைய தளத்தில் எவ்வாறான கருத்துக்களை குறித்த இளைஞர் வெளியிட்டார் என்பது குறித்த தகவல்கள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.
 
குற்ற விசாரணைப் பிரிவினரால் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நவம்பர் மாதம் 6ம் திகதி வரையில் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 
மாத்தளை அலவ்வ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கடுமையான விமர்சனங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.