இந்தியாவின் கருத்தை இலங்கை செவிமடுக்கவில்லை – எதிர்க்கட்சி தலைவர் அத்வானி

small_athvaniஇந்தியாவின் தவறான வெளியுறவு கொள்கை காரணமாக இந்தியாவின் கருத்தை இலங்கை அரசு செவிமடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எல்.கே அத்வானி தெரிவித்துள்ளார்.

ஆட்சியிலுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்தம் செய்ய முடியாவில்லை என ஊடகவியலாளரிடம் பேசும் போது குற்றம் சாட்டினார்.

இந்தியாவின் தவறான வெளியுறவு கொள்கை காரணமாக இலங்கை பிரச்சினையில் தனது நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொண்டுள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவின் கருத்தை இலங்கை ஏற்று மதித்து வந்தது.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டு அமைதி பேச்சு வார்த்தைக்கு திரும்ப வேண்டும்இ போர் நடைபெறும் பகுதியில் இருந்து அப்பாவி மக்கள் வெளியேற அனுமதிப்பதோடு அவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைக்க செய்யவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.

சுயமாக முடிவெடுக்க முடியாமல் இருக்கிறது. காங்கிரஸ் கூட்டணி அரசின் அதிகாரம் முழுவதுமே பிரதமர் இல்லத்தில் இல்லை. சோனியா வசிக்கும் இல்லத்தில் தான் உள்ளது என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.