இலங்கை தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளும் பெற்றுதரும் வரை காங்கிரஸ் ஓயாதம்!

இலங்கை தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளையும் பெற்றுதரும் வரை காங்கிரஸ் ஓயாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தியின் 25 ம் ஆண்டு நினைவு நாள் மற்றும் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

sithamparamஇக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இலங்கையில் தமிழருக்கான உரிமை பெற்று தருவதில் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் உறுதியாக இருக்கிறது. இலங்கைக்கு இந்திய நாடாளுமன்ற குழு சென்றதன் மூலம் தற்போது 81 ஆயிரம் தமிழர்கள் மீண்டும் தங்களது வாழ்விடங்களுக்கு சென்று உள்ளனர். மீதம் உள்ளவர்கள் படிபடியாக இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இதற்கான நடவடிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. சிங்கள மொழியுடன் தமிழ்மொழிக்கும்சம அந்தஸ்து பெற்று தரவும். இந்திய அரசியல் சாசனத்தின் 14 வது ஷரத்தில் உள்ளதுபோல இலங்கை அரசியல் சாசனத்தில் 13 வது ஷரத்தை திருத்தி சிங்கள மக்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளும் அங்குள்ள தமிழர்களுக்கு பெற்றுதரும் வரை காங்கிரஸ் ஓயாது என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.