இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு செய்வதனை அனுமதிக்க முடியாது

இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜே.வி.பி கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
 
உள்விவகாரப் பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வுகளை எட்ட முடியும் எனவும், இலங்கை விவகாரங்களில் அமெரிக்க சற்று விலகியிருக்க வேண்டும் எனவும் ஜே.வி.பி கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

SomawansaJVPகூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தும் எந்தவொரு அதிகாரமும் அமெரிக்காவுக்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மனித உரிமை மீறல்கள் அல்லது குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளினது உதவியின்றி மூன்று தசாப்த கால யுத்தத்தை முடிவுறுத்த முடியுமாயின் ஏனைய பிரச்சினைகளை தீர்ப்பது அவ்வளவு கடினமாக அமையாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த சகல படைவீரர்களையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் முதன்மை கடமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, இலங்கை விவகாரங்களில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையீடு செய்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது.
 
இலங்கையில் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.