இலஙகையர்களும் பயணித்திருக்கலாம் என நம்பப்படும் படகு அவுஸ்திரேலியாவில் மூழ்கியுள்ளது

imagesCA8NIKYXஇலங்கையர்களும் பயணித்திருக்கலாம் என நம்பப்படும் சட்டவிரோத படகு ஒன்று, அவுஸ்திரேலிய வடமேற்கு கடற்பரப்பில் கடலில் இன்று மூழ்கியுள்ளது. இதன்போது,20 பேர் ,பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது, இந்தப் படகில், சுமார் 40 பேர் வரை பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 17 பேர் அவுஸ்திரேலிய கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்தப் படகில் நேற்று பின்னிரவு பிரச்சினை ஏற்பட்டதன் பின்னரே இன்று அது மூழ்கியுள்ளது.

அவுஸ்திரேலிய கரையோர கண்காணிப்பு விமானம் இந்தப்படகை அவதானித்தன் பின்னரே அவுஸ்திரேலிய மீட்புக்கப்பல், விரைந்துள்ளது.

ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து 78 இலங்கையர்களை காப்பாற்றிய பின்னர், அது இந்தோனிசியாவுடன் இராஜதந்திர முறுகலை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே 17 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.