யுத்தம் தொடர்பாக அறியவேண்டுமானால் முப்படைத் தளபதி என்ற வகையில் யுத்தத்திற்கு உத்தரவிட்ட தன்னிடம் கேட்குமாறு அமெரிக்காவிடம் மகிந்த கோரிக்கை

அரச படையினர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கிடையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பாக அறியவேண்டுமானால் முப்படைத் தளபதி என்ற வகையில் யுத்தத்திற்கு உத்தரவிட்ட தன்னிடம் கேட்குமாறு அமெரிக்காவின் உள்துறைப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று வெளிவிவகார அமைச்சைப் பணித்துள்ளார். யுத்தம் தொடர்பாக வேறு எவரிடமும் விசாரிப்பது பொருத்தமற்றது எனவும் அறிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

makindaஅமெரிக்க உள்துறை பாதுகாப்புத் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தற்போது அமெரிக்கா சென்றுள்ள கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கு அறிவித்துள்ளமை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
அதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறித்து விசாரணைகளை நடத்த கூட்டுப்படைத் தலைமை அதிகாரிக்கு அமெரிக்க உள்துறை திணைக்களம் அறிவித்துள்ளமை குறித்தும் அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மூன்று தினங்களுக்கு முன்னரே அமெரிக்க உள்துறைத் திணைக்களம் சரத் பொன்சேக்காவிற்கு இதுகுறித்து அறிவித்துள்ளது. இதற்குப் பதில் கடிதமொன்றை அனுப்பியுள்ள ஜெனரல் சரத் பொன்சேக்கா, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதியே எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
இதன்பின்னர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பற்றிய விசாரணைகளுக்கு வருமாறு அமெரிக்க உள்துறைப் பாதுகாப்புத் திணைக்களம் சரத் பொன்சேக்காவிற்கு அறிவித்துள்ளது. சரத் பொன்சேக்கா இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்ததை அடுத்து இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவிற்கு வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், சரத் பொன்சேக்காவிற்கு உதவும் வகையில் சடத்தரணிகள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.