திருகோணமலை மாவட்டத்தில் நிவாரணப்பொருட்கள் லொறி கடத்தப்பட்டு விற்பனை

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு  விநியோகிப்பதற்கென இந்தியாவில் இருந்து அனுப்பபட்ட  கோதுமை மா மூடைகளும், பருப்பு மூடைகளும் திருட்டுத்தனமாக வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவது  தெரியவந்துள்ளது.

jaf10014vfஅண்மையில் திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு விநியோகிப்பதற்காக  வழங்கப்பட்ட மா மூடைகளும், பருப்பு மூடைகளும் தோப்பூரிலிருந்து கடத்தப்பட்டு தம்புள்ள பொருளாதார நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த வேளையில் பொருள்களை ஹபரணப் பொலிஸார் பிடித்துள்ளனர்.

ஹபரணப் பொலிஸாருக்குக் கிடைத்திருந்த இரகசியத் தகவலையடுத்து அவர்கள் ஹத்தரஸ்கொட்டுவ வீதித் தடுப்புப் பரிசோதனை நிலையத்தில் சம்பந்தப்பட்ட லொறியை நிறுத்திச் சோதனை நடத்தினார்கள். இந்த உணவுப் பொருள்கள் ஏற்றப்பட்டிருந்த லொறியைத் தடுத்து காவலில் வைத் ததோடு அதில் இருந்த ஐந்து நபர்களையும் சந்தேகத்தில் பொலிஸார் கைது செய்தனர். இந்த நபர்கள் வெகுகாலமாகவே இவ்வாறு உணவுப்பொருள்களைக் கடத்தி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தம்புள்ளவில் உள்ள முக்கிய வியாபாரப்புள்ளிகள்பலர் இதில் சம்பந்தப்பட் டிருப்பதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்நபர்கள் விரைவில் பொலிஸ் காவலில் வைக்கப்படுவார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட லொறியில் இருந்து 50 கிலோ நிறைகள் கொண்டிருந்து 48 பருப்பு மூடைகளும் 50 கிலோ நிறைகள் கெண்ட 50 மா மூடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.