மன்னார் மாவட்டத்திற்கு தடுப்பு முகாமில் இருந்து அனுப்பபட்ட மக்களில் ஒருபகுதியினர் சொந்த இடத்திற்கு போக தடை

தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு தற்காலிகமாக மன்னார் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் சிலர் அவர்களது சொந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்காமல் வேறு இடங்களுக்கு மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

stopsignஇவ்வாறு  நானாட்டான் சிறுக்கண்டல் நலன்புரி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மக்களில் 09 குடும்பத்தைச் சேர்ந்த 38 பேர் வரை பண்டிவிரிச்சான் பகுதிக்கு அனுப்ப இருப்பதாக மன்னாரில் உள்ள அவர்களது உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த 38 பேரின் உறவினர்களும் அவர்களை பொறுப்பெடுத்து மன்னார் உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு அனுப்புமாறு  கேட்டுள்ளனர். ஆனால் அவர்களை அங்கு அனுப்பாது பண்டிவிரிச்சான் உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.