சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்படுவதனை தடுக்க அரசாங்கம் கடும் முயற்சி

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதனை தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

srilanka-governmentதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்க உள்துறை திணைக்களம் விசாரணை நடத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
 
எனினும், இந்தத் திட்டத்தை கைவிடுமாறு அமெரிக்காவிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க விசாரணைகளை சமாளிப்பதற்கு அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதரகம் சரத் பொன்சேகாவிற்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.