கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க அதிகாரிகளால், ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்

இந்த வருடம் ஐ.நா. சபை அமர்வுக்காக இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சென்றிருந்த வேளை, அமெரிக்க குடிவரவுத்துறை அதிகாரிகள், அவரை சுமார் ஒரு மணித்தியாலமாக விசாரணைக்கு உட்படுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vimal-200தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது:-

இந்த வருடத்தில் ஐக்கிய நாடுகள்,அமர்வுக்காக சென்றிருந்த இலங்கைக் குழுவில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவும் உள்ளடங்கியிருந்தார்.
 
இந்தநிலையில்,அமெரிக்காவுக்கு சென்ற பின்னர் அமரிக்க குடிவரவு அதிகாரிகள் கோத்தபாயவை சுமார் ஒரு மணித்தியாலமாக விசாரணை செய்துள்ளனர்.
 
எனினும், இந்த விடயம் அந்த வேளையில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்
 
கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக மனித உரிமை மீறல் குறித்து விசாரணை செய்ய அமெரிக்காவுக்கு எவ்வித உரிமைகளும் இல்லை என தெரிவித்துள்ள விமல் வீரவன்ச,

வெளிநாட்டு சக்திகள், இலங்கையின் இராணுவ வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு எதிராகச் செயற்படுகின்றன என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.