சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா விசாரணை நடத்தும் சூழ்ச்சியின் பின்னணியில் அரசாங்கம்

முன்னாள் இராணுவத் தளபதியும், கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா விசாரணை நடத்த காட்டு முனைப்பு அரசாங்கத்தின் சூழ்ச்சித் திட்டமாக இருக்கக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

Tissaaththanayakeஜெனரல் சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா விசாரணைகளை நடத்த மேற்கொள்ளும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபடுவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறான முனைப்புக்களை அரசாங்கம் முன்னெடுக்கக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கத்தைச் சேர்ந்த பல முக்கிய அரசியல் தலைவர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்த போது எவ்விதமான விசாரணைகளும் நடத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா விசாரணை நடத்த காட்டும் முனைப்பு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
எனவே, சரத் பொன்சேகாவை அரசியலில் ஈடுபட விடாது ஓரங்கட்டும் அரசாங்கத்தின் ஓர் முயற்சியாகக் கூட இந்த விசாரணைகள் காணப்படலாம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.