மதுறு ஓயா இராணுவ முகாமுக்கு அருகே இரு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

மணலாறு மாவட்டத்தில் மதுறு ஓயா இராணுவ முகாமுக்கு அருகின் இரு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த  இரு சடலங்களும் இராணுவ முகாமில் இருந்து  சூட்டு எல்லைக்கு உட்பட்ட தூரத்திலேயே இருந்ததாகவும் அதே நேரம் இராணுவமே தமக்கு தகவல் அனுப்பியதாகவும்  பொலிசார் தெரிவித்துள்ளனர்.

nerudal-tamil-news1இந்த இரு சடலங்களும் வெடிப்பொருட்கள் வெடிக்கவைத்ததால் மரணமடைந்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். இந்த இளைஞர்கள் இராணுவ முகாமில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டபின்னர் வெடிப்பொருட்கள் கொண்டு உடலங்களை வெடிக்க வைத்து இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.