கோத்தபாய விசாரணை தொடர்பாக ரோகித போகொல்லாம அமெரிக்க தூதருடன் அவசர பேச்சு

இலங்கை வெளினாட்டு அமைச்சர் ரோஹித போகொல்லாம அவர்கள் இன்று அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டினா அவர்களுடன் அவசர அவசரமாக பேசியுள்ளார். கோத்தபாய தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா தகவல் திரட்டிவருகின்றமை, சரத் பொன்சேகா மீதான விசாரணை ஆகியவற்றை ஆட்சேபித்தே இந்த சந்திப்பு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Rohitha Bogollagama

Rohitha Bogollagama

இந்த சந்திப்பை தொடர்ந்து திருமதி பற்றீசியா அவர்கள் அரசாங்கத்தின் கரிசனைகளையும் கவலைகளையும் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிய படுத்துவதாக கூறியுள்ளார்.

எந்தவொரு சூழலிலும் இலங்கை அரசாங்கத்தின் உயர் பதவியில் இருப்பவர்களை தாம் விசாரணை செய்ய அனுமதிக்க போவதில்லை என மகிந்த கூறியதாக  திரு ரோகித அவர்கள்  பற்றீசியாவிடம் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.