தமிழீழ தமிழர்கள் சென்ற மூழ்கிய படகில் இருந்து இதுவரை 27 பேர் மீட்ப்பு, 11 பேர் பலியாகி இருக்கலாம் என சந்தேகிப்பு

கடந்த இரவு அவுஸ்ரேலியாவில் இருந்து 2400 கி.மீ தூரத்தில் கொக்கஸ் தீவுக்கு அருகில் கடல் கொந்தளிப்பினால் மூழ்கடிக்கப்பட்ட படகு தாயக தமிழர்கள் சென்ற படகு ஆகும். இதில் 39 பேர் பயணம் செய்ததாகவும்.

chrismasislandகடல் கொந்தளிப்பினால் கடந்த இரவு படகு மூழ்கியதாகவும் கூறப்படுகின்றது. இதுவரை 27 பேரினை தாய்வான் நாட்டு மீன்பிடி கப்பலும், அவுஸ்ரேலிய எண்ணெய் கப்பலும் மீட்டுள்ளனர். இதனைவிட ஒரு இறந்த உடலினை அவுஸ்ரேலிய ரோயல் விமானப்படையினர் மீட்டுள்ளனர். 11 பேரின் நிலைமை தெரிய வரவில்லை என விமானப்படையினர் கூறியுள்ளனர்.

எனினும் தாம் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளனர். 11 பேரும் பெரும்பாலும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர் அவுஸ்ரேலிய அதிகாரிகள். இது தொடர்பாக அவுஸ்ரேலிய பிரதமர் இலங்கை ஜனாதிபதியுடன் தொலை பேசியில் பேசியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.