நாம் இலங்கை சென்ற பின்னரே தமிழர்கள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள் ‐ கனிமொழி

தமிழக நாடாளுமன்ற குழு இலங்கை சென்ற பின்னரே  இலங்கையில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள் என கவிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

kanimoliசென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது, ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கைக்கு சென்று வந்த பின்னர் முள்வேலி முகாம்களில் இருந்து இதுவரைக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் சொந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து முள்வேலியில் இருந்து தமிழர்களை விடுவிக்க தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகிறோம். அவர்களுக்கு முழு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என விரும்புகிறோம் எனவும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.