மட்டக்களப்பு காவற்துறைப் பயிற்சி கல்லூரி வளாகத்தில் குண்டு வெடிப்பு

மட்டக்களப்பு காவற்துறைப் பயிற்சி கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் படைச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குண்டொன்றை செயலிழக்க செய்ய முயன்ற போது அந்த குண்டு வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

MRAPTestBlastஅண்மையில் மீட்கப்பட்ட குண்டொன்றை செயலிழக்க செய்ய முயற்சித்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
 
இதேவேளை மாதுறுஓயா இராணுவ முகாமில் பழைய இருப்புக்களைச் சேகரிக்கச் சென்ற ஊர்காவற்படைச் சிப்பாய் உட்பட இருவர் குண்டு வெடித்ததில் உயிரிழந்துள்ளனர்.
 
மாதுறுஓயா இராணுவ முகாமிற்குச் சொந்தமான துப்பாக்கிச் சூடும் திடலில் பழைய இருப்புக்களைச் சேகரிக்கச் சென்ற ஊர்காவற்படைச் சிப்பாய் உட்பட இருவர் மோட்டார் குண்டொன்றை துண்டுகளாக்க முயன்ற போது அது வெடித்து சிதறியதில் உயிரிழந்துள்ளனர்.
 
இவர்களின் சடலங்கள் நேற்று முன்தினம் மாதுறுஓயா காட்டுப் பகுதியிலுள்ள இராணுவ முகாமிற்குச் சொந்தமான துப்பாக்கிச் சூடும் திடலிலிருந்து மீட்கப்பட்டதாக மகாஓய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சடலங்கள் மீட்கப்படும்போது அழுகிய நிலையில் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.