இந்து கோவில்களை இடித்தவர் ராஜபக்சே: வைகோ

இலங்கையிலுள்ள இந்து கோவில்கள் பலவற்றை இடித்தவர் ராஜபக்சே. என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கூறினார்.

அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீன ராணுவத்தின் உதவியுடன், சிங்களப் படை, தமிழர்களை தாக்குகிறது என, கடந்த காலத்தில் நான் கூறினேன். ராமேஸ்வரம் மீனவர்கள், தற்போது, அதை உறுதி செய்துள்ளனர்.

vaiko101இந்தியாவுக்கு நட்பு நாடு என்று கூறிக்கொள்ளும் சீனா, இலங்கை திருகோணமலையில், ராணுவ தளம் அமைக்கும் முயற்சியானது, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாக அமையக்கூடும். அதன்பிறகு, தமிழகத்துக்கு தான் அதிக ஆபத்து உண்டாகும்.

ஏற்கனவே, இலங்கைக்கு பொருள் மற்றும் ஆயுதம் வழங்கிய இந்திய அரசு, சிங்கள படைகளுக்கு பயிற்சியும் அளித்தது. தற்போது, திருச்சி பொன்மலையிலுள்ள ரயில்வே பணிமனையில், ரயில்வே சம்பந்தப்பட்ட பயிற்சியும், நாளை முதல் சிங்களர்களுக்கு வழங்கப்படுகிறது. தொடர்ந்து, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், நூற்பாலை சம்பந்தப்பட்ட பயிற்சியும் வழங்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.

திருப்பதி வந்த ராஜபக்சேவுக்கு, பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்ற செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது, தமிழர்களை இழிவுபடுத்துவதாகும். இலங்கையிலுள்ள இந்து கோவில்கள் பலவற்றை இடித்தவர் ராஜபக்சே என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.