புலம்பெயர் தமிழர்கள் என்ற போர்வையில் அரசாங்கத்தால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட எட்டப்பர்கள் இலங்கையைப்பற்றி புகழாரம்

புலம்பெயர் தமிழர்கள் அணி ஒன்று அரசாங்கம் தமிழ் மக்களுக்கு செய்யும் நிவாரண, புனர்வாழ்வு , மீழ் குடியமர்வு நடவடிக்கைகளில் தாம் திருப்தியடைவதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக இலங்கை அரச தொலைகாட்சியில் அவர்களது அரசாங்கத்தை பாராட்டி நன்றி தெரிவிக்கும் காட்சியும் காண்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக மேலதிக தகவல் வருமாறு,

அண்மையில் வெளி நாடுகளில் இருந்து அழைக்கப்பட்ட புலம்பெயர் தமிழர்கள் சிலர் வவுனியா முகாம் ஒன்றிற்கு கூட்டி செல்லப்பட்டனர். இவர்கள் டென்மார்க், ஜேர்மனி, இலண்டன், அமெரிக்கா ஆகிய இடங்களில் இருந்து வந்தவர்களாம். இவர்களை வடக்கின் வசந்தம் திட்ட இணைப்பாளர் சந்திரா பெனாண்டோ அவர்கள் அழைத்து சென்று ஒரு சில இடங்களை காட்டினார்.

இதன்பின்னர் வெளினாடுகளில் இருந்து வந்த தமிழர்கள் அரசாங்கத்தின் செயற்பாட்டில் திருப்தியடைவதாகவும் இதனால் அரசாங்கத்திற்கு தாம் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர்.

இவர்கள் சென்று முகாம்களையும் சந்தித்த மக்களையும் பார்த்த பின்னரா இப்படி கூறினார்கள் என்பதனை நோக்கும் போது  அதிசயமாகவும் ஆத்திரமாகவும் இருக்கின்றது.

eddappar

இந்தப் எட்டப்பர் கூட்டம் யார் யாரென்ற விபரங்கள் இதுவரை தெரிவிக்கப் படவில்லை, அத்தோடு இவர்கள் தமிழர்களா என்ற சந்தேகமும் ஏற்ப்பட்டுள்ளது. இவர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா. உடனே எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள், இந்த எட்டப்பர் கூட்டத்தை எம் மக்களுக்கு அடையாளம் காட்டுவோம். எமது மின்னஞ்சல் முகவரி: mail@nerudal.com

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.