அமெரிக்காவின் அழுத்தத்தால் இலங்கை இந்தியாவின் உதவியை கோரத் திட்டம்

இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டு வரும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்தியாவிடம் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்றின் ஆய்வுப் பகுதி சுட்டிக்காட்டியுள்ளது.

indiasrilankaஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர்களான பெசில் ராஜபக்ஷ, கோதபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் விரைவில் புதுடெல்லி விரையவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
 
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமெரிக்க அரசாங்கம், இலங்கை மீது பிரயோகித்து வரும் அழுத்தங்களை ஒத்ழைப்பு பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமையப் பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் நடத்தப்படவுள்ள விசாரணைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. யுத்த நடவடிக்கைகளுக்கு இந்தியா திரைமறைவிலிருந்து பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளதாக அந்த ஆய்வுக் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
குறிப்பாக இந்தியப் பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக இராணுவ முன்நகர்வுகளை முடிவுறுத்த வேண்டுமென இந்தியா அழுத்தம் கொடுத்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
எவ்வாறெனினும், இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகளில் இந்தியாவிற்கு மறைமுக பங்கு இருப்பதாகவும் இதனால் இலங்கையை பாதுகாக்கும் முனைப்புக்களில் இந்தியா தீவிரம் காட்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.