படகு கவிழ்ந்து காணாமல் போனவர்களை கண்டு பிடிக்க இன்டர்போலின் உதவி கோரப்பட்டுள்ளது

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்கும் நோக்கில் பயணித்த இலங்கைப் படகொன்று விபத்துக்குள்ளானதில் சிலர் கொல்லப்பட்டுள்ளதுடன், சிலர் காணாமல் போயுள்ளனர்.
 
படகு மூழ்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகளுக்கு சர்வதேச காவல்துறை சேவையான இன்டர்போலின் உதவியை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார்.

interpolpoliceபடகில் பயணித்த 11 இலங்கையர்களை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
 
இந்தப் படகில் பயணித்த 27 பேரை அருகில் பயணித்த இரண்டு சரக்குக் கப்பலில் உள்ளவர்கள் மீட்டுள்ளனர்.
 
குறித்த படகுப் பயணிகள் எந்த நாட்டிலிருந்து அவுஸ்திரேலியா சென்றார்கள் என்ற தகவல்களை வழங்குமாறு இன்டர்போலிடம் இலங்கை கோரியுள்ளது.
 
மிகவும் பழைய படகுகளைப் பயன்படுத்தி இவ்வாறான பயணங்களை மேற்கொள்வதனால் விபத்துக்கள் நேர்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.