இரண்டாண்டுகால ஜனாதிபதி ஆட்சியை தியாகம் செய்யத் தயார்

இரண்டாண்டுகால ஜனாதிபதி ஆட்சியை தியாகம் செய்யத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு அமைப்பான ஸ்ரீலங்கா நிதஹஸ் சேவக சங்கத்தின் 7 ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Mahinda1எதிர்வரும் 15ம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலையா அல்லது பொதுத் தேர்தலையா முதலில் நடத்துவது என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
பொதுத் தேர்தல்களை மட்டும் முதலில் நடாத்தும் திட்டமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பொதுத் தேர்தலையும், ஜனாதிபதித் தேர்தலையும் ஒன்றாக நடத்தப்படும் எனவும், அல்லது ஜனாதிபதி;த் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
2010ம் ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் அநேகமாக தேர்தல்கள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களையும் நடத்துமாறு ஆளும் கட்சி அமைச்சர்கள் சிலர் கோரிவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
சகல விடயங்களையும் கருத்திற் கொண்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.