தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் புலானய்வுப் பிரிவினர் விசாரணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றம் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோரிடம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

sivali,selvamஇன்றைய தினம் நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
 
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து தம்மிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
சிவாஜிலிங்கம் மீது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் ஆதரமற்றவை என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.