இலங்கை அரசு உடனடியாக தமிழீழ விடுதலை புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பை ஏற்க வேண்டும் – பிரணாப்

பிரணாப் முகர்ஜி

பிரணாப் முகர்ஜி

இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்வதற்கு தமிழீழ விடுதலை புலிகளினால் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை ஏற்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தூத்துக்குடியில் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றூம் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையத்திற்காக அடிக்கல் நாட்டுவிழாவில் பேசும் போது இதனைத் தெரிவித்தார்.

பொதுமக்கள் போர்ப்பகுதியில் இருந்து பாதுகாப்பு பகுதிக்கு வெளியேற உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும். என தெரிவித்த அவர் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசு ஏற்று இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள சங்கரபேரி விலக்கு அருகே 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையத்தை தூத்துக்குடியில் அமைக்கின்றன.

இதேவேளை தூத்துக்குடிக்கு வந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கறுப்புக் கொடி காட்டி ஊர்வலமாக சென்ற ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.