சரத் பொன்சேகாவிடம் விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை – வெளிவிவகார அமைச்சு

கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதியும், முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா விசாரணைகளை நடத்தவில்லை என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 
சரத் பொன்சேகா அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ளதகாவும் நாளைய தினம் இலங்கையை சென்றடைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

srilanka-governmentஅவர் அமெரிக்காவை விட்டு புறப்படுவதற்கு முன்னர் எந்தவிதமான விசாரணைகளும் நடத்தப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
 
அமெரிக்க உள்விவகாரத் திணைக்களோ அல்லது வேறும் நிறுவனங்களோ விசாரணை நடத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
 
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக அண்மையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
 
வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம, அமெரிக்க தூதுவர் பெட்ரிஸியா புட்டினாஸை அழைத்து விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இலங்கையின் தேசிய சுய கௌவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமெரிக்கா செயற்பட்டமை பாராட்டுக்குரியதென வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
 
அதேவேளை சரத் பொன்சேக்கா அமெரிக்க உள்துறை மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் இன்று அமெரிக்க நேரப்படி பிற்பகல் 4.30 மணிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அமெரிக்கவில் இருந்து வெளியேறியுள்ளதாக நம்பத் தகுந்த தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க நேரடிப்படி நேற்றிரவு 11.30 அளவில் அவர் அங்கிருந்து புறப்பட்டுள்ளதுடன், அவர் நாளைய தினம் அதிகாலை 4 மணிக்கு இலங்கை திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்கா எந்தவித அறிக்கைகளையும் வெளிவிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.