வன்னியில் பணிபுரிந்த அரச ஊழியர்கள் உடன் பணிக்கு திரும்புக இல்லையேல் சம்பளம் இல்லை

வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் முன்பு பணி புரிந்த  அரச ஊழியர்கள் உடன் வேலைக்கு திரும்பவேண்டும் இல்லையேல் இப்போது வழங்கப்படும் சம்பளம் நிறுத்தப்படும் என  வட மாகாண ஆளுனர் ஜி. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

G_A_Chandrasiriகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உட்பட மீளக்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதேசங்களில் கடமையாற்றும் அரச ஊழியர்கள் உடனடியாகத் தமது கடமை களுக்குச் சமுகமளிக்க வேண்டுமென வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி அறி வுறுத்தியுள்ளார். இடம்பெயர்தோர் நலன்புரிக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டிருப்போர் மற்றும் அதற்கு முன்னர் இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் வடமாகாணத்தைச் சேர்ந்தோரை அவர்களது இடங்களில் மீளக்குடியமர்த்து வதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனால் அந்தப் பொது மக்கள் வசிக்கும் பிரதே சங்களில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் உட்பட சகல அரச நிறுவனங்களில் கடமையாற்றும் உத்தி யோகத்தர்களும் தாம் சேவையாற்ற வேண்டிய அலுவலகங்களுக்கு உடனடியாக கடமைக்குச் சமுகமளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான பணியாளர்கள் இன்னமும் தடுப்பு முகாமில் இருக்கின்றனர் அவர்கள் எவ்வாறு வரமுடியும் என திணைக்கள தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.