தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் தலைமையிலான எதிரணியில் சேரும் வாய்ப்பு இல்லை

இன்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பினரை அழைத்த எதிரணி கூட்டணியின் உறுப்பினர்கள் தமது ஐக்கிய தேசிய முன்னணியில் இணையுமாறு அழைப்பு விடுத்ததுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினையும் வழங்கியுள்ளனர்.

tnaஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தோர் அதனை நிராகரித்து விட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய முற்போக்கு முன்னணி சார்பாக திரு மனோ கணேசனும், திரு ரவூப் ஹக்கீம் அவர்களும் இந்த முன்மொழிவினை கொண்டு வந்து தம்முடன் பேசியதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் நெருடலின் கொழும்பு செய்தியாளரின் தகவலின் படி தமிழ் தேசிய கூட்டமைப்பு கூடுதலாக எதிர் கட்சியுடன் இணையக்கூடிய வாய்ப்புக்களே அதிகம் இருப்பதாக தெரிவித்தார். எது எப்படி இருந்தாலும், தமிழீழம் பெற்றெடுத்த கூட்டமைப்பு தமிழீழத்திற்க்கு எதிராக செயற்ப்படுவோரோடு இணைந்தால் அது மன்னிக்க முடியாத தேச துரோகமாகும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.