சகோதரனைக் காப்பாற்றுமாறு மகிந்தா இந்தியாவிடம் உதவி!! உதவக்கூடாது என்கிறார் நெடுமாறன்

கோத்தபாய ராஜபக்சவையும், ஜெனரல் சரத்பொன்சேகாவையும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள நிலையில் அவர்களின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த இந்தியா உதவக்கூடாது என தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

nedumaran-ayyaஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவையும், ஜெனரல் சரத்பொன்சேகாவையும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள நிலையில் அவர்களின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த இந்தியா உதவக்கூடாது.

சிறீலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவைத் தலையிட்டு தனது சகோதரரை காப்பாற்றுமாறு இந்தியாவின் உதவியை நாடியுள்ளார்.

இதற்காக சிறீலங்காச் சிறப்பு தூதுவர்கள் உள்ளடக்கிய குழு ஒன்று டெல்லிக்கு அனுப்பப்பட்டு பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேச்சுகளை நடத்திவிட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு இலட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த போர்க் குற்றவாளிகளை காப்பாற்றுவது தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்லாமல் அது மனித நேயத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.

ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பான நடவடிக்கைகளையும் இந்தியா வரித்துக்கட்டிச் செயற்பட்டது. அதுபோன்று இப்போதும் செயற்பட்டால் அது ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.