இன்றும் செல்வம் அடைக்கலனாதனை பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை இன்னமும் வீடு திரும்பவில்லை

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வெளிநாட்டில் தங்கியிருந்து நாடு திரும்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

tna_mp_telo_selvam2நேற்று நாடு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களையும் சிவாஜி லிங்கம் அவர்களையும் விமான நிலையத்தில் இரு மணி நேரம்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.

நேற்றிரவு மாதிவெலவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கட்டிடத்தொகுதியில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் இவரைச் சந்தித்து உரையாடிய பின்னர் இன்று காலை விசாரணைக்கு வருமாறு அழைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இன்று காலை அவர் விசாரணைகளுக்காக அங்கு சென்றுள்ளதாகவும்,பிற்பகல் வரை விசாரணைகள் முடிந்து திரும்பவில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.