தாம் கேட்டுக்கொண்டது போல் சரத் பொன்சேக்கா எதுவித பிரச்சினையும் இன்றி நாடுதிரும்பியுள்ளார் ‐ ரணில்

தாம் கேட்டுக்கொண்டது போல் இலங்கை முப்படைகளின் பிரதானி சரத் பொன்சேக்கா எதுவித பிரச்சினையும் இன்றி நாடுதிரும்பியுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

SRILANKA/முப்படைகளின் பிரதானி எதுவித விசாரனைக்கும் முகம்கொடுக்காது, எந்தபிரச்சினையும் இன்றி நாடு திரும்பவேண்டும் என தாம் அமெரிக்காவிடம்  கேட்டுக்கொண்டதாகவும், அவர் அங்கு எந்த விசாரணைக்குட்படுத்தப்படாது இலங்கையை வந்தடைந்தது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
ஐக்கிய தேசிய முன்னணியினால் நடத்தப்பட்ட ஊடகமாநட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
 
ஐக்கிய தேசிய முன்னணி உதயமாகி அதன் முதலாவது ஊடகமாநாடு கொழும்பில் இன்று இடம்பெற்றது. இந்த ஊடகமாநாட்டிற்கு முன்னணியில் அங்கம் வகிக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காரங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
 
 
முதலாவது ஊடக மாநாட்டின் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமது கூட்டணி குறித்து விளக்கமளிக்க தேவையில்லை எனவும் இந்த கூட்டணி குறித்து சகலரும் அறிவர் எனவும், மாறாக தற்போது பாரிய பிரச்சினையாகியுள்ள சரத் பொன்சேக்கா பற்றி கருத்து கூற விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
 
ஜெனரல் சரத் பொன்சேக்கா தொடர்பில் கருத்துரைத்த அவர், இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ நியூயோர்க்;குக்கு சென்றவேளையில்  அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக அரசாங்கம் அறிவிக்கின்றது.
 
விசாரணைக்குட்படுத்தப்பட்டதனை அவர் அரசாங்கத்திற்கு அறிவித்திருக்க வேண்டும். அவர் ஏன் அரசாங்கத்திற்கு அறிவிக்கவில்லை என்பது தொடர்பில் நாம் சந்தேகம் கொள்கின்றோம். அத்துடன் சரத் பொன்சோக்காவுக்கோ, திசர சமரசிங்கவுக்கோ தான் இவ்வாறானதொரு பிரச்சினையை எதிர்நோக்கியதாக அவர் ஏன் கூறிவில்லை என்று கேள்வி எழுப்புவதாகவும் அவர் இந்த செய்தியாளர் மாநாட்டின் போது குறிப்பிட்டார்.
 
சரத் பொன்சேக்காவை பொறியொன்றில் சிக்கவைக்கும் நோக்கில் அங்கு அனுப்பி வைக்கப்பட்டாரா? என்று தமக்கு சந்தேகம் நிலவுவதாக தெரிவித்த அவர், கோதாபய ராஜபக்ஷவின் பெயர் வெளியானவுடனனேயே இவை அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்ததாக அவர் கூறினார்.
 
இத்தனை பிரச்சினைகளுக்கு பின்னர் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின, எனினும் அவர் தனது குடியுரிமையை இரத்து செய்யவில்லை என்றே எமக்கு புலப்படுகின்றது.
 
இந்த சம்பவங்களை வைத்து பார்க்கும் போது முப்படைகளின் தளபதியான மஹிந்த ராஜபக்ஷ தனது சகோதரனைக் காப்பாற்றுவதற்கும், தமது குடும்ப அரசியலைக் காப்பாற்றுவதற்கும், இலங்கையின் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த பெருமைக்குரிய சரத் பொன்சேக்காவை பலிகொடுப்பதற்கும் தயாராகிவிட்டதாகவே என்னத் தோன்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.