சிங்களத்தின் அகதிகள் யோசனை அவுஸ்ரேலியாவால் நிராகரிப்பு

சிங்கள அரசு அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு சட்ட விரோதமாக அவுஸ்ரேலியா செல்லும் அகதிகள் விடயத்தில் ஒரு சூழ்ச்சிகரமான திட்டத்தினை கொடுத்திருந்தது. ஆனால் அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் இவான் அதனை நிராகரித்துள்ளார்.

australianfஅதாவது  இலங்கையில் இரண்டு இலட்சத்திற்கு அதிகமான மக்கள் சட்ட விரோதமாக குடியேற தயாராக உள்ளதாகவும் எனவே இந்த மக்களை அவுஸ்ரேலிய உத்தியோக பூர்வ ரீதியாக அனுமதித்தால் சட்ட ரீதியற்ற முறையில் மக்கள் அவுஸ்ரேலியா வருவதனை  தடுக்க முடியும் என்பதே இந்த ஆலோசனை.

இவ்வாறு இந்த திட்டம் சரி வந்தால் உடனடியாக் இருக்கின்ற சிங்களவர்களை ஏற்றி அனுப்பவே இந்த திட்டத்தினை சிங்கள அரசு முயற்சித்துள்ளது. தமிழர்களின் அவலங்களில் இன்னமும் எப்பிடி தனது இனத்தை கட்டி எழுப்பலாம் என னினைக்கும் சிங்களத்தின் சூழச்சியினை அவுஸ்ரேலியா அடியோடு மறுத்து விட்டதாக அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.