விடுதலைப் புலிகள் மாவோயிஸ்டுகளுக்கு ஆயுத பயிற்சி வழங்கியுள்ளனர்

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய மாவோயிஸ தீவிரவாதிகளுக்கு ஆயுத பயிற்சி வழங்கியுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சின் செயலளார் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
 
இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதற்கு அந்நாட்டில் வைத்து இந்த பயிற்சிகளை புலிகள் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

rajeevஇந்தியாவில் புலிகள் ஊடுறுவியிருக்கக் கூடுமென அந்நாட்டு புலனாய்வுப் பிரிவினர் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 
சிறந்த பயிற்சி பெற்ற 12 தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்தியாவிற்குள் ஊடுறுவியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, சட்டிஷ்கார் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் புலிகள் தமது செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
மாவோயிஸ தீவிரவாதிகளுக்கு மட்டுமன்றி ஏனைய அரசியல் குழுக்களுக்கும் புலிகள் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளனர் என பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
 
மாவோயிஸ பிரச்சினைகள் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க இலங்கைத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.