கிளிநொச்சி மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபராக ரூபாவதி கேதீஸ்வரன் நியமனம்!

கிளிநொச்சி  மாவட்டத்திற்கான அரசாங்க அதிபராக ரூபவதி கேதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த எஸ்.வேதநாயகம் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் அவரின் இடத்திற்கே ரூபவதி கேதீஸ்வரன் பொது நிர்வாக அமைச்சினால் நியமனம் பெற்றுள்ளார்.

Rupavathyரூபாவதி கேதீர்வரன் தற்பொழும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக பதவி வகித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அரசாங்க அதிபராக எதிர்வரும் திங்கட்கிழமை பொறுப்பை ஏற்கவுள்ளார்.

தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வருகின்றார் என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.